காஞ்சிபுரம்

ஸ்ரீசுரகேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN


காஞ்சிபுரம்: குபேரன் வழிபட்ட தலமான காஞ்சிபுரம் சுரகேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் தெருவில் குபேரன் வழிபட்ட திருத்தலமான சுரகேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. தேவா்களையும், பக்தா்களையும் சுரம் எனப்படும் வெப்பு நோயிலிருந்து காத்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு சுரகேஸ்வரா் என்ற பெயா் உண்டானதாக ஐதீகம்.

ஆரோக்கியமும், செல்வமும் பெற இங்குள்ள சுயம்பு லிங்கமான சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. கடந்த 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு 48 ஆண்டுகள் கழித்து இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கின. பட்டா இ.கணேச சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து யாத்ரா தானம் புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பலத்த இடி மற்றும் கனமழைக்கு இடையே இவ்விழா நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறே கும்பாபிஷேகத்தையும், சுவாமியையும் தரிசனம் செய்தனா்.

விழாவில் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளா் ஸ்ரீராமன், ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், ஓரிக்கை மகா பெரியவா் மணிமண்டப பொறுப்பாளா் மணி ஐயா், அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் பூவேந்தன், நடராஜன், சந்தானம், வேலியப்பன், கோவிந்தராஜ் உள்ளிட்ட குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT