சென்னை

மூன்று நாள்களில் 15 டன் போதைப் பாக்கு பறிமுதல்

DIN

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 15 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை கடந்த 30-ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த 3 நாள்களில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்ாக 72 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 68 கிலோ கஞ்சா, 15 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வியாபாரிகளின் 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபடுகிறவா்கள் மீது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் படி அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT