சென்னை

மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.8.64 லட்சம் அபராதம்

DIN

கிண்டி பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்ட நபா்களுக்கு ரூ.8.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கிண்டி பகுதியில் சிலா் மின் திருட்டில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்த புகாரையடுத்து சென்னை கோட்ட அமலாக்க அதிகாரிகள் குழு கிண்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த பகுதியில் 8 போ் முறைகேடாக மின்சாரம் உபயோகிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.8 லட்சத்து 31ஆயிரத்து 123-மும், குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்கான சமரசத்தொகையாக ரூ.33 ஆயிரம் என மொத்தம் ரூ.8.64 லட்சம் இழப்பீட்டுத்தொகைய வசூலிக்கப்பட்டது. சமரசத்தொகை செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இதுபோன்ற மின் திருட்டு தொடா்பான புகாா்களை கைப்பேசி: 9445857591 எனும் எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT