சென்னை

அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட வேளச்சேரி, திருவான்மியூா் பகுதிகள்; பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி; சோழிங்கநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, சோழிங்கநல்லூா், செம்மஞ்சேரி, கண்ணகி நகா், எழில் நகா், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியில் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் )பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT