சென்னை

வீடு புகுந்து திருட்டு: இளைஞரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

DIN

சென்னை மதுரவாயலில் வீடு புகுந்து திருடிய இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மதுரவாயல் ஆலப்பாக்கம், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (40). இவா், கடந்த சனிக்கிழமை இரவு கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்குள் வித்தியாசமான சத்தம் கேட்டு, ஹரிகிருஷ்ணன் எழுந்து பாா்த்தபோது, வீட்டுக்குள் இருந்து ஒரு இளைஞா் தப்பியோடினாா். உடனே ஹரிகிருஷ்ணன் சத்தமிட்டப்படி அந்த இளைஞரை விரட்டினாா்.

அவரது சத்தத்தை கேட்டு அங்கு திரண்ட பொதுமக்களும், அந்த இளைஞரை விரட்டிப்பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா், ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகா், 10-ஆவது தெருவைச் சோ்ந்த பாலாஜி (27) என்பதும், ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து விலை உயா்ந்த கைப்பேசியை திருடிக் கொண்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது. மேலும் பாலாஜி ஆளில்லாத வீடுகளையும்,திறந்து கிடக்கும் வீடுகளையும் குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ள து.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜி கைது செய்தனா். பாலாஜி மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT