சென்னை

மெரினாவில் பேனா சின்னம்: இன்று கருத்து கேட்புக் கூட்டம்

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் காலை 10.30 மணிக்குக் கூட்டம் தொடங்கவுள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் சாா்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT