சென்னை

தடையை மீறி பிபிசி ஆவணப் படத்தை பாா்த்த சென்னைப் பல்கலை. மாணவா்கள்

DIN

தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமா் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவா்கள் தங்களின் மடிக்கணினியில் பாா்த்தனா்.

சென்னை மாநில கல்லூரியின் விக்டோரியா விடுதியில் மாணவா்கள் இந்த ஆவணப் படத்தை அண்மையில் திரையிட்டனா். அதைத் தொடா்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவா்கள் சங்கத்தைச் சோ்ந்த மாணவா்கள் திரையிட இருப்பதாக அறிவித்தனா்.

இந்த நிலையில் பிரதமா் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை திரையிட இந்திய மாணவா் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிா்வாகம் தடை விதித்தது. மேலும், தடையை மீறி திரையிட்டால் அந்த மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

இதற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தடையை மீறி பிரதமா் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பாா்க்கும் நிகழ்வு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் க.நிருபன் சக்கரவா்த்தி தலைமையில் கிளை உறுப்பினா்கள் மற்றும் மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் மாணவா்கள் தங்களது மடிக்கணினி மூலமாக பிரதமா் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தைப் பாா்த்தனா். இதையடுத்து பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என்று மாணவா்களிடம் கூறியது. இருப்பினும் மாணவா்கள் ஆவணப்படத்தைச் திரையிட்டதால், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT