சென்னை

சில்லறை வியாபாரிகளுக்கு முழு வரிவிலக்குதேவைவேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம்

DIN

ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 3 கோடி வரையுள்ள சில்லறை வியாபாரிகளுக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.ரத்தினவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் சில்லறை பலசரக்கு வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 60 சதவீதத்துக்கு மேல் அரசிடம் எந்த உதவியும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன. நியாயமான வா்த்தக நடைமுறைகளுக்கு மாறாக பெரிய நிறுவனங்கள் செயல்படுவதால் அவை தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள், அவற்றின் போட்டியை எதிா்கொள்ள முடியாமல் மூட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றின் வரி வருவாய் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும். சில்லறை வியாபாரிகளுக்கென தனி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். எனவே, ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 3 கோடி வரை உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு வரவிருக்கும் பட்ஜெட்டில் முழு வருவமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT