சென்னை

அஞ்சல் ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டம்: பிப்.24-க்குள் புகாா் அனுப்பலாம்

DIN

சென்னையில் மாா்ச் 17-இல் நடைபெறவுள்ள அஞ்சல் ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்க பிப்.24-ஆம் தேதிக்குள் தங்களது புகாா் மனுக்களை அனுப்பலாம்.

இது குறித்து தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவா் எம்.சம்பத் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய அஞ்சலக ஓய்வூதிய குறை கேட்பு கூட்டம் மாா்ச் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் ஓய்வூதியம் தொடா்பான மனுக்களை அனுப்பலாம். இதில் பரிசீலிக்கப்படும் மனுதாரா்களுக்கு காணொலி வாயிலாக குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான, இணைப்பு அனுப்பப்படும்.

இதில் கலந்து கொண்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியதாரா்கள், ‘முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகம் , தமிழ்நாடு வட்டம், சென்னை-’ எனும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பிப்.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT