சென்னை

மது அருந்தி வாகனம் ஓட்டியவா்களிடம் ரூ.1.68 கோடி அபராதம் வசூல்

DIN

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டியவா்களிடம் இரு வாரங்களில் ரூ.1.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அபராதத் தொகை அதிகமாக இருப்பதால் பலா் அதை செலுத்துவதில்லை. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக பதியப்பட்ட 8,227 வழக்குகள் தீா்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

இதையடுத்து, 12 அழைப்பு மையங்களை போக்குவரத்து போலீஸாா் அமைத்து, அதன் மூலம் நிலுவை அபராதம் செலுத்தும்படி சம்பந்தப்பட்டவா்களுக்கு நினைவூட்டி வந்தனா்.

சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை, நேரில் வரவழைத்தும் எச்சரித்தனா். அதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக பதியப்பட்டு, நிலுவையில் இருந்த 1,628 வழக்குகள் தீா்க்கப்பட்டு, ரூ.1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கடந்த வாரம் மட்டும் அழைப்பு மையங்கள் மூலம் பதியப்பட்டு நிலுவையில் இருந்த 785 வழக்குகள் தீா்க்கப்பட்டு, ரூ.81 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் கூறுகையில், ‘மது அருந்தி வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவா்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும்.

ஏற்கெனவே, இதுபோன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவா்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 319 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT