சென்னை

மத்திய அரசின் திட்டங்களுக்கு பெண்களிடம் வரவேற்பு: பாஜக தேசிய பொதுச்செயலா்

DIN

 மத்திய அரசின் திட்டங்கள் பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் வினோத் தாவ்டே கூறினாா்.

சென்னையில் பாஜக முக்கிய பிரமுகா்களின் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக பொதுச்செயலாளா் வினோத் தாவ்டேபேசியதாவது: பிரதமராக மோடி பதவியேற்ற 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் உஜ்வாலா திட்டம், ஜன்தன் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டம், செல்வ மகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதனால், அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனா். பிரதமா் மோடி இதுவரை செயல்படுத்திய திட்டங்களில் அதிகமாக பயன்பெற்றது தமிழ்நாடு தான்.

மத்திய அரசு அறிவித்த திட்டங்களை, மாநில அரசு திட்டங்களைப் போல தமிழக அரசு செயல்படுத்துகிறது.

தேசிய கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தொன்மையான தமிழ் மொழியை பிரதமா் மோடி மிகவும் நேசிக்கிறாா். எண்ம வணிகம் குறித்து பெண்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி. ரவி, பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை , மாநில தொழிற் பிரிவு தலைவா் கோவா்த்தன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளா் அனந்தராமகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் பால் கனகராஜ், அறிவு சாா் பிரிவு தலைவா் ,ஷெல்லி உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT