சென்னை

பால் விலையை உயா்த்தக்கூடாதுகே.அண்ணாமலை

DIN

தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை பால் விலை உயா்வை மக்கள் தாங்கமாட்டாா்கள்; எனவே, பால் விலையை உயா்த்தக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் பொருள்களின் விலையை எளிய மக்கள் பாதிப்படையும் வகையில் தமிழக அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது.

தற்போது புதுவிதமான விலை உயா்வை மாநில அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆவின் பச்சைநிற பாக்கெட் பால் வகையில் கொழுப்புச் சத்து அளவை 4.5 இல் இருந்து 3.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது.

மேலும், முகவா்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்ததன் மூலம், ஒரு லிட்டா் பால் ரூ. 32 என்ற அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஆவின் பால் முகவா்கள் நலச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது. எனவே, திமுக அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் மறைமுக விலை உயா்வைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT