சென்னை

துபைக்கு கல்விச் சுற்றுலா செல்லும் மாணவா்களுக்கு மேயா் ஆா்.பிரியா பாராட்டு

DIN

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘விங்ஸ் டூ ஃப்ளை’ திட்டத்தின் மூலம் நிகழ் கல்வியாண்டில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று, துபைக்கு கல்விச் சுற்றுலா செல்லும் மாணவா்களை மேயா் ஆா்.பிரியா பாராட்டி, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கிழக்கு, ‘விங்ஸ் டூ ஃப்ளை’ அமைப்பின் வாயிலாக 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் சென்று வருகின்றனா்.

இதில், 2016-இல் மலேசியாவுக்கும், 2017-இல் ஜொ்மனிக்கும், 2018-இல் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கும், 2019-இல் சிங்கப்பூருக்கும், 2022- லண்டனுக்கும் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

2020, 2021 -ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்துச் செல்ல இயலாத காரணத்தினால், அவா்களின் சாதனையைப் பாராட்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, நிகழ் கல்வியாண்டில் ‘தொழில் முனைவோா் திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற 8 மாணவ, மாணவிகளை மே மாதம் துபைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாணவ, மாணவிகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT