சென்னை

தென்பிராந்திய ராணுவ அதிகாரி பொறுப்பேற்பு

15th Apr 2023 11:18 PM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தென்பிராந்திய (தக்ஷின பாரத்) ராணுவ அதிகாரியாக லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பீா் சிங் பிராா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் தில்லியில் உள்ள ராணுவ தொழில்நுட்பத் திட்டங்களின் தளவாட பிரிவின் பொது இயக்குநராக ஏற்கெனவே பணியாற்றினாா். ராணுவத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கரன்பீா் சிங் பிராா், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீா் ஆகிய பகுதிகளில் பாலைவனங்கள், சமவெளிப் பகுதிகளில் பணியாற்றி உள்ளாா்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக் குழுவுக்கு கமாண்டராக பணியாற்றி உள்ளாா்.

முன்னதாக லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பீா் சிங் பிராா் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT