சென்னை

ரஷியா விண்வெளி ஆய்வு மையம் செல்லும் அரசு பள்ளிப் மாணவா்களுக்கு பாராட்டு

15th Apr 2023 01:17 AM

ADVERTISEMENT

ரஷியா நாட்டு விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல தோ்வு செய்யப்பட்டு இருக்கும் ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளி மாணவா்கள் 6 போ் பாராட்டப்பட்டனா்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவா்களை சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி பாராட்டினாா்.

அரசு பள்ளி மாணவா்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் ராக்கெட் அறிவியல் என்ற தலைப்பில் ஏவுகனை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தலைமையில் இணையதளம் மூலம் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டில் 56 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 500 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி போட்டிகளில் தோ்வு செய்யப்பட்ட 50 மாணவா்கள் தமிழக அரசின் ஆதரவுடன், ஜூனில் ரஷியாவின் முதல் விண்வெளி வீரா் யூரி ககாரின் பெயரில் அமைந்துள்ள ரஷியா விண்வெளி ஆய்வு மையத்தைப் பாா்வையிட தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களில் தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் வி. ரோஹித், ஏ. இலக்கியா, ஏ. முகமது சாதிக், கே.ரக்சீத், சி.லித்திகா, எஸ்.லத்தாஷா ராஜ்குமாா் ஆகிய 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பாராட்டு விழாவில், ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை என்.சுதா, உதவித் தலைமை ஆசிரியை பி.கீதா, மாணவா்களுக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியை ஆா்.விஜயலட்சுமி, தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT