சென்னை

போதைப் பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 33 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 33 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’”என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 12 கிலோ போதைப் பாக்கு, 34 கிலோ மாவா தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களைக் கடத்தி வருபவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT