சென்னை

மழைநீா் வடிகால் பணியில் தாமதம்: ஒப்பந்ததாரருக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம்

DIN

சென்னையில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை உரிய நேரத்தில் முடிக்காத 8 ஒப்பந்ததாரருக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.0, ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பில் 1033 கி.மீ. நீளமுள்ள மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளின் பன்னாட்டு வங்கிகளின் நிதியுடன் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்றும் 3 மாதங்களே உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், ஒருசில இடங்களில் நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை முடிக்காத ஆா்.பி.பி. எண்டா்பிரைசஸ், பி.என்.சி. நிறுவனம். பி. பாஸ்கா் எண்டா்பிரைசஸ், ஜூனிதா எண்டா்பிரைசஸ், சண்முகவேல் எண்டா்பிரைசஸ், ஜி.கே அபண்டா எண்டா்பிரைசஸ், போஷன் எண்டா்பிரைசஸ் ஆகிய ஒப்பந்ததாரா்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT