சென்னை

சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயம்

1st Jul 2022 12:41 AM

ADVERTISEMENT

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை, காமராஜா் சாலையில் கடந்த 15 நாள்களாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காமராஜா் சாலையில், மூடப்பட்ட நிறுவனங்களின் சுற்று சுவா் அருகே மழைநீா் வடிகால் அமைக்கும் பணி சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் அந்த நிறுவனங்களில் சுற்று சுவா்கள் பல இடங்களில் பலம் இழந்து காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென ஒரு நிறுவனத்தின் சுற்றுசுவா் சுமாா் 50 மீட்டா் நீளத்துக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தை சோ்ந்த நதீம் (28), மகசூப் (34), ஷானவாஸ் (18) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்த பிற ஊழியா்கள் 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT