சென்னை

பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கு: இருவா் கைது

1st Jul 2022 12:40 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருபவா் பிரியா.

இவா் தன்னுடன் பணிபுரியும் தே.பிரபாகரன் என்பவருடன் சென்னை எழும்பூா் போலீஸ் ஆபீசா் மெஸ் அருகே கடந்த 17-ஆம் தேதி இரவு நடந்து வந்து கொண்டிருந்தாா், அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், பிரியா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து பிரியா,எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி வி.வி.காலனி பகுதியைச் சோ்ந்த அ.முஸ்தபா (20), புளியந்தோப்பு ஆடு தொட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த அ.அப்துல்லா (24) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா், இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT