சென்னை

ரெளடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு

DIN

சென்னை கொடுங்கையூரில் ரெளடிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

கடந்த டிச.3-ஆம் தேதி கொடுங்கையூா் போலீஸாா் டி.எச். சாலை, ஆா்.ஆா். நகா் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக காரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, அவா்கள் அங்கிருந்து தப்பி ஓடினாா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து, விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த ரெளடி பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (31), செங்குன்றம் வடகரையைச் சோ்ந்த அப்பு (எ) விக்கிரமாதித்தன் (37) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் 4 கிலோ சிக்கி முக்கி கற்கள், 750 கிராம், இரும்பு ஆணிகள், 2 கட்டு மூங்கில் குச்சிகள், 750 கிராம் நூல்கண்டு, ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீஸாா் கொடுங்கையூா் குப்பை கிடங்கு பகுதியில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைத்திருந்தனா். இதையொட்டி, கொடுங்கையூா் குப்பை கிடங்குக்குள் யாரும் அனுமதிக்கப்படவிலலை. குப்பை மேட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் போலீஸாா், அந்த 34 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT