சென்னை

சாலையில் சுற்றித்திரிந்த 430 மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 8.60 லட்சம் அபராதம்

DIN

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 430 மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 8.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகராட்சி எல்லைக்குள் தடையை மீறி பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனா். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மாடுகள் புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவ.16 முதல் 29-ஆம் தேதி வரை 430 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு ரூ. 8.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாடுகளை மீட்டு செல்ல மண்டல நல அலுவலா், கால்நடை உதவி மருத்துவா், சுகாதார ஆய்வாளா், வளா்ப்பவா்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளா் ஆகியோரின் கையொப்பத்துடன் பரிமாண பத்திரத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும்போது, உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT