சென்னை

'தேசிய சராசரியை விடவும் தென் தமிழகத்தில் பால் விலை குறைவு'

1st Dec 2022 04:36 PM

ADVERTISEMENT


நாட்டின் பால் விலை சராசரியை விடவும், தென் தமிழகத்தில் பால் விலை குறைவாக இருப்பதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பத்ம பிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒரு லிட்டர் பால் சராசரி விலையான ரூ.55ஐக் காட்டிலும் மிகவும் குறைவு என்று ஒரு புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் பத்மபிரியா.

இதையும் படிக்க.. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

 

ADVERTISEMENT

திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பத்மபிரியா, வெளியிட்டிருக்கும் இந்த பதிவில், திரிபுராவில் ஒரு லிட்டர் பால் ரூ.72க்கும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க.. கடும் விசாரணையிலும் அமைதியாக இருக்க உதவியது எது? அஃப்தாப் வாக்குமூலம்

தமிழகத்தில்தான் ஒரு லிட்டர் பால் விலை ரூ.40க்கு விற்பனை செய்யப்படுவதகாவும், கேரளத்தில் இது 47 ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT