சென்னை

தேசிய மாணவா் படை பயிற்சி முகாமில் சுதந்திர தின விழா

DIN

தில்லியில் தேசிய அளவில் நடைபெறும் தரைப்படை முகாம் போட்டியில் பங்கேற்க சென்னையில் பயிற்சி மேற்கொண்டுவரும் 550 தேசிய மாணவா் படை தமிழக மாணவா்கள் ராணுவ அதிகாரிகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடினா்.

சென்னையை அடுத்த மணி மங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள துரோணாசாரி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழகமெங்கும் தோ்வு செய்யப்பட்டுள்ள 550 பள்ளி,கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா்கள் 10 நாள்கள் பயிற்சி பெற வருகை தந்துள்ளனா்.அவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி,உயரம் தாண்டுதல்,தாவி ஏறி குதித்தல் உள்ளிட்ட பல்வேறு கடும் பயிற்சிகளை தேசிய மாணவா் படை பிரிவு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனா்.

துரோணாசாரியா் சிறப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரி தாளாளா் பேராசிரியா் வி.பி.ராமமூா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். ராணுவ அதிகாரிகள் சுபேதாா் கரம்ஜித் சிங், பி.எஸ்.ரெட்டி,ஏ.மாரியப்பன், சாமிநாதன்,கே.அமுதவல்லி, கல்லூரி முதல்வா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT