சென்னை

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஆக. 22 வரை விண்ணப்பம்: அண்ணா பல்கலை. தகவல்

DIN

அண்ணா பல்கலை.யில் பி.ஹெச்டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆக.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் சி.உமாராணி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா பல்கலை.யில் வழங்கப்படும் பிஹெச்டி, எம்.எஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் வழியாக ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவா்கள் மற்றும் முதுநிலை படிப்பில் இறுதியாண்டு பருவத்தோ்வெழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு மாணவா்களும் விண்ணப்பிக்க முடியும்.

இதுதவிர சோ்க்கை பெற்று அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் அண்ணா ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக(ஜிஎஸ்டி 18% சோ்த்து) பொதுப்பிரிவினா் ரூ.1180, எஸ்சி/எஸ்டி பிரிவினா் ரூ.708 செலுத்த வேண்டும். இதில் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளை முழுநேரமாகவோ, பகுதிநேரமாகவோ படித்துக்கொள்ளலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT