சென்னை

ஆக.7-இல் 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் வரும் 7-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
 கரோனா தொற்றுப் பரவலின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 32 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.
 33-ஆவது முகாம் 50 ஆயிரம் இடங்களில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த, 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது. 75 நாள்களுக்கு, 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. விரைவாக அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்காக இரண்டு வாரத்துக்கு ஒருமுறை சிறப்பு முகாம் நடத்தப்படும். தமிழகத்தில் சுமார் 3.50 கோடி பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. சிறப்பு முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தவணை மற்றும் முதல், இரண்டாவது தவணை தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT