சென்னை

திருமங்கலம், ஆலந்தூா் மெட்ரோவில் இன்று இலவச மருத்துவ முகாம்

DIN

திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஃபோா்டிஸ் மருத்துவமனை ஆகியன சாா்பில், இலவச மருத்துவ முகாம்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில்நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.18) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறவுள்ளது.

வண்ணாரப்பேட்டை, கிண்டி ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் அக்டோபா் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்தி பயனடையலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT