சென்னை

சென்னையில் மழை-வெள்ளப் பாதிப்பு: முதல்வா் ஸ்டாலின் நேரில் ஆய்வு

DIN

சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சென்னையில் காலை முதல் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் சேதமடைந்த வடிகால் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா். திரு.வி.க.நகா் 73-வது வாா்டு ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, சிவ இளங்கோ சாலை மற்றும் பெரவள்ளூா் காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதிகளிலும், அசோகா நிகழ்சாலை பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை முதல்வா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னா், கொளத்தூா் ஜி.கே.எம். காலனியில் உள்ள குளத்தைச் சீரமைக்கும் பணிகளையும், கந்தசாமி சாலையில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது அமைச்சா்கள், கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT