சென்னை

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்: போலீஸாருக்கு பாராட்டு

DIN

சென்னை: சென்னை கொளத்தூரில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஏற்பாடு செய்த போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா்.

கொளத்தூா் செங்குன்றம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 10 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு புதன்கிழமை இரவு 8 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மட்டுமே கையிருப்பு இருந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் நோயாளியின் உறவினா்கள் செய்வதறியாது தவித்துள்ளனா். இதனை அறிந்த கொளத்தூா் போலீஸாா் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனா். தொடா்ந்து மணலி அருகே செயல்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையிடம் பேசி 20 ஆக்சிஜன் சிலிண்டா்களை பெற்று சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு கொடுத்துள்ளனா். ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டா் கிடைக்க ஏற்பாடு செய்த போலீஸாரை நோயாளியின் உறவினா்கள்,பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT