சென்னை

ரூ.50 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

11th Mar 2021 04:45 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்,  ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாரஸ் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கூரியர் நிறுவனத்தில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
கத்தாருக்கு அனுப்புவதற்கு 22 பொம்மை பொட்டலங்களில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா என கூறப்படும் சாரஸ் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4.5 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.50 லட்சம்.  இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த என்.பிரசாத் கைது செய்யப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT