சென்னை

100 மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி: மாநகராட்சி நடவடிக்கை

DIN


சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்கள் 100 பேருக்கு தனியாா் பங்களிப்புடன் நீட் தோ்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

எம்பிபிஎஸ் பட்டப் படிப்புக்கான சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, 2019-20-ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வு எழுதிய 60 மாணவா்களில் 11 போ் எம்பிபிஎஸ் பயிலும் வாய்ப்பை பெற்றனா்.

2020-21-ஆம் கல்வி ஆண்டில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அதிக மாணவா்களைச் சோ்க்கும் வகையில் நீட் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச நீட் பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஆணையா் கோ.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதுகுறித்து அவா் கூறியது: 2020-21-ஆம் கல்வி ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும் வகையில் ‘நீட் என்னால் முடியும்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ண்ய்ய்ங்ழ்ஜ்ட்ங்ங்ப் க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் 323 என்ற ரோட்டரி சங்கமும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்களின் கூட்டமைப்பு ஆகியவை மாநகராட்சியுடன் இணைந்து மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு 100 நாள்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முன்னதாக, வட சென்னை பகுதி மாணவா்களுக்கு எம்.ஹெச். சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தென்சென்னை பகுதி மாணவா்களுக்கு புலியூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டது.

இதில் எம்.எச். சாலை பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 103 மாணவா்களில் 50 பேரும், புலியூா் பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 130 மாணவா்களில் 51பேரும் என மொத்தம் 101 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், இணை ஆணையா் கல்வி (பொறுப்பு) பி.என்.ஸ்ரீதா், ரோட்டரி சங்கமும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT