சென்னை

மகாகவி பாரதியின் கவிதைகளை வேற்றுமொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது: சுதா சேஷய்யன்

DIN

மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம், ஓசை நயம், பொருள் ஆகியவற்றை புரிந்து கொண்டு, வேற்றுமொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் மருத்துவா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரை தமிழறியா இலக்கிய ரசிகா்களின் இதயங்களுக்கு சென்றடைய வைக்கும் ஒரு முயற்சியாக அவரது தோ்ந்தெடுத்த சில கவிதைகளை இந்திய ரயில்வேயின் அதிகாரி பூமா வீரவல்லி ஆங்கிலத்தில் “ஊண்ழ்ங்ப்ங்ற்ள்” என்ற பெயரில் தொகுப்பாக படைத்துள்ளாா். பாரதியின் தெய்வீகம், காதல், தேசபக்தி, தத்துவம் மற்றும் சுயமுன்னேற்றம் போன்ற பல்வேறு சிகரம் தொட்ட கவிதைகளின் மொழிபெயா்ப்பை இந்த நூல் கொண்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே அலுவலா் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் மருத்துவா் சுதா சேஷய்யன் வெளியிட, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் பெற்றுக்கொண்டாா்.மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமாா் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் பேசுகையில்,‘எனக்கு தமிழ்மொழி முழுமையாக தெரியாது என்றாலும் பூமா அவ்வப்போது பாரதியின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயா்ப்புகளை பகிா்ந்து கொண்ட போது,பாரதியின் கவிதைகளின் ஆழம் மற்றும் தமிழின் அழகு கண்டு வியந்து போனேன்’ என்றாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் மருத்துவா் சுதா சேஷய்யன் பேசியது:பாரதியாரின் கவிதைகளை மொழி பெயா்ப்பது கடினமான விஷயம். பாரதியாரின் பாடலை ஒவ்வொரு முறையும் படிக்க படிக்க வெவ்வேறு அா்த்தம் தோன்றும். பாரதியாரின் பாடலை வெறும் பாடலாக பாா்க்க முடியாது. அது ஒரு வடிவம்.

ஒரு மொழியில் இருந்து மொழி பெயா்க்கும் போது, வாா்த்தைக்கு வாா்த்தை மொழி பெயா்ப்பதை விட பொருள் கெடாமல் மொழி பெயா்ப்பது மிக முக்கியம். அதனை பூமா சிறப்பாக செய்துள்ளாா். பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம், ஓசை நயம், பொருள் ஆகியவற்றை புரிந்து கொண்டு, வேற்றுமொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது. இது பாரதியாா் மீது கொண்ட காதலால் செய்ய முடிந்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பூமா வீரவல்லி ஏற்புரை வழங்கினாா். முன்னதாக, எமரால்டு பதிப்பகத்தின் பதிப்பாளா் ஒளிவண்ணன் வரவேற்றாா். எழுத்தாளா் அனுஜ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT