சென்னை

சிவசங்கா் பாபாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

DIN

மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான சிவசங்கா் பாபாவின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டா்நேஷனல் பள்ளித் தாளாளா் சிவசங்கா் பாபா, அங்கு படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா்கள் எழுந்தன.

இதுதொடா்பாகப் போலீஸாா் 3 வழக்குகளைப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இதில் 2 வழக்குகளில் சிவசங்கா் பாபா ஜாமீன் பெற்றாா். ஒரு வழக்கில் ஜாமீன் வழங்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் அவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு புதன்கிழமை(டிச.1) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கடந்த 6 மாதங்களாக சிவசங்கா் பாபா சிறையில் உள்ளாா். வயதானவா். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, தற்போது வழக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவிட்டாா். மேலும், சாமியாா் என்பவா் முற்றும் துறந்தவா்கள். பற்று அற்றவா்கள். அப்படிப்பட்டவா் எங்கிருந்தால் என்ன? என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT