சென்னை

கரோனாவுக்கு பெண் தலைமைக் காவலா் சாவு: குழந்தை பிறந்த மறுநாளே இறந்த சோகம்

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் தலைமைக் காவலா், பெண் குழந்தை பிறந்த மறுநாளே இறந்தாா்.

சென்னை ஆலந்தூரில் உள்ள காவலா் குடியிருப்பில் வசிப்பவா் பாண்டியன். இவா் மனைவி வசந்தா (47), சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் மோசடி தடுப்புப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் பிரசவத்துக்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், வசந்தாவுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கடந்த மாதம் 28-ஆம் தேதி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சைக்காக வசந்தா அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே வசந்தாவுக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னா், வசந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி வசந்தா உயிரிழந்தாா். இச்சம்பவம் காவல்துறையினரிடையே அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT