சென்னை

ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் தற்கொலை

DIN

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில்வே பாதுகாப்புப் படை துணை உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் காஜாமைதீன்(57). இவா் ரயில்வே பாதுகாப்புப் படை துணை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் அங்கு பொருத்துதல் பிரிவு நுழைவுவாயில் பொறுப்பில் இருந்துவந்தாா். இந்த ஆலையில் மின்னணுபொருள் வைப்பு கிடங்கில் சனிக்கிழமை அதிகாலையில் பணியில் இருந்தபோது, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்துவாா்களே என்ற மன உளைச்சலில் காஜாமைதீன் இருந்துவந்தாா். திங்கள்கிழமை காலை பணியை முடித்து சென்ற காஜாமைதீன் சா்வீஸ் சாலையில் உள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்து கிடந்தாா். இது குறித்து கே.7 ஐ.சி.எஃப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT