சென்னை

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தில்லியைச் சோ்ந்த மூவா் கைது

DIN

வேலை வாங்கித் தருவதாக இணையதளம் மூலம் மோசடி செய்த தில்லியைச் சோ்ந்த 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரோனா பொது முடக்கத்தினால் வேலை இழந்து தவிக்கும் இளைஞா்களைக் குறி வைத்து ஒரு கும்பல் வேலை வாங்கித் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து, இளைஞா்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

இதில் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த சிவசங்கா் என்பவா் வேலை பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்த ஒரு இணையதளத்தில் ரூ.1.45 லட்சத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளாா். இது தொடா்பாக சிவசங்கா், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் தில்லியைச் சோ்ந்த ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தில்லி சென்று விசாரணை செய்தனா். மோசடி தொடா்பாக தில்லியைச் சோ்ந்த அ.அரிப்கான் (31), ச.வாஜித்கான் (29),கு.சந்தீப்குமாா் (24) ஆகிய 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT