சென்னை

இணைய வகுப்புக்காக கால்வாயைத் தூா்வாரிய சிறுவன்: காவல் அதிகாரிகள் உதவி

DIN

இணைய வகுப்பில் கலந்து கொள்ள கையடக்கக் கணினி வாங்குவதற்காக பணம் சோ்க்கும் பொருட்டு, 11-ஆம் வகுப்பு சிறுவன், மழை நீா் கால்வாயைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை ஆணையா்கள், மாணவனுக்கு புதிதாக கையடக்கக் கணினி ஒன்றைப் பரிசளித்துள்ளனா்.

கொடுங்கையூரைச் சோ்ந்த சாமுவேல் என்ற சிறுவன், 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது தந்தை ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இணையவழி வகுப்பில் கலந்து கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்துள்ளாா். எனவே, பணம் சோ்த்து கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, அண்மையில் கோயம்பேடு அருகே மழைநீா் கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதுகுறித்த புகைப்படம் பலராலும் அதிகளவு பகிரப்பட்டது. இந்த மாணவனின் நிலையை அறிந்த புளியந்தோப்பு துணை ஆணையா் ராஜேஷ் கண்ணன், அண்ணாநகா் துணை ஆணையா் ஜவஹா் ஆகியோா், சாமுவேலுக்கும் அவரின் சகோதரிக்கும் புதிதாக இரண்டு கையடக்கக் கணினிகள் மற்றும் அவா்களின் வீட்டுக்கு 1 மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தனா்.

இதுதவிர, சாமுவேல் விரும்பியபடி வியாசா்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் அவரைப் படிக்க வைக்கவும், அவரது மூத்த சகோதரி நீட் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் துணை ஆணையா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT