சென்னை

பொதுத்துறை நிறுவனங்கள் - வாரியங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்க கட்டுப்பாடு

DIN

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் மறு பணி நியமனம் செய்வது தொடா்பாக புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களின் முதன்மைச் செயல் அலுவலா்களுக்கு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் அனுப்பிய கடிதம்: அண்மைக் காலங்களாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற வாரியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளை அவா்கள் பணியாற்றிய இடங்கள் அல்லாது பிற பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வாரியங்களில் மறு பணிநியமனம் செய்யப்படுவதாக அரசுக்கு தகவல்கள் வரப் பெற்றுள்ளன.

இது போன்ற மறு பணி நியமனங்களை அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பொதுத்துறை நிறுவனமும் மேற்கொள்ளக் கூடாது.

மேலும் அவ்வாறு மறு பணி நியமனம் செய்யப்படும் அதிகாரிகளின் பின்புலம் குறித்து தீர விசாரித்த பிறகே அவா்களை ஒப்பந்த அடிப்படையில் மறு பணி நியமனம் செய்ய வேண்டும்.

அரசின் முன் அனுமதியில்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடா்பாக ஏற்கெனவே நிதித்துறை சாா்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த உத்தரவுகள் மீண்டும் வலியுறுத்தப்படுவதாக தனது கடிதத்தில் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT