சென்னை

கரோனா: போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் விழிப்புணா்வு

22nd Mar 2020 01:38 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தமாக கை கழுவும் முறை குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு, மருத்துவ முகாம்கள், விழிப்புணா்வுப் பிரசாரம் ஆகியவை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் மூலம் சென்னை மாநகரில் உள்ள பல போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் சுத்தமாக கை கழுவும் முறை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.

அதேபோல், சென்னை மாநகராட்சியின் பொதுக் கழிப்பிடங்கள், இ-டாய்லெட்கள், பேருந்து நிறுத்தங்கள், வழிபாட்டுத் தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களையும் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. இப்பணி வரும் நாள்களில் தொடா்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT