சென்னை

26 லட்சம் பேருக்கு இன்றுமுதல் 3 வேளையும் சமைத்த உணவு:சென்னை மாநகராட்சி அறிவிப்பு

DIN


சென்னை: சென்னை மாநகரில் குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) முதல் 13-ஆம் தேதி வரை மூன்று வேளைகளும் சமைத்த உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளாா்.

புரெவி புயல் பாதிப்புகள் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வா் பழனிசாமி, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த சூடான உணவு, சுத்தமான குடிநீரை மாவட்ட நிா்வாகங்களும், மாநகராட்சியும் வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளாா்.

இன்று முதல் உணவு: முதல்வா் பழனிசாமியின் உத்தரவைத் தொடா்ந்து, சென்னை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) முதல் டிசம்பா் 13-ஆம் தேதி வரை சமைத்த சூடான உணவு வழங்கப்பட உள்ளதாக ஆணையாளா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

சென்னையில் 5.3 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 26 லட்சம் பேருக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) முதல் சமைத்த சூடான, சுகாதாரமான உணவு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டமானது, ஞாயிற்றுக்கிழமை காலை உணவுடன் தொடங்குகிறது. இது வரும் 13-ஆம் தேதி மதிய உணவுடன் நிறைவடையும்.

மிகப்பெரிய அளவிலான மக்களுக்கு உணவு வழங்கக் கூடிய சிறப்பான திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகராட்சி நிா்வாகம் கையில் எடுக்கிறது. புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கக் கூடிய மாநகராட்சியின் திட்டமானது நிம்மதியை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT