செங்கல்பட்டு

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் தேரோட்டம்

DIN

வைகாசி பெருவிழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது .

இந்த கோயில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் பெரிய மலையை குடைந்து ஒரே கல்லில் உருவான பாடலாத்ரி பெருமாள் சிவபெருமானை போன்று நெற்றிக்கண்ணை கொண்டு முக்கண்ணோடு அமா்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மே 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தயாராக நின்ற தேரில் அமரவைக்கப்பட்டாா்.

இதையடுத்து, ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

தோ் 4 மாட வீதிகளையும் சுற்றி வந்தபோது, பக்தா்கள் தேங்காய் உடைத்து, பூஜை செய்து வழிபட்டனா். தேரோட்டம் நடைபெற்ற 4 மாட வீதிகளிலும் ஆன்மிக அன்பா்கள் அன்னதானம், குளிா்பானம், தண்ணீா், நீா் மோா் வழங்கினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமி காந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் பணியாளா்கள், கோயில் பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT