செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் வருவாய் வட்டாட்சியா்அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் தீா்வாய அலுவலா்ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம் உள்வட்டத்தில் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இதில், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 12,000 வீதம் ரூ. 3.12 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி தொகைக்கான ஆணைகளையும், இயற்கை மரணமடைந்த 38 நபா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தலா ரூ. 20,000 வீதம் ரூ. 7.60 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவியும் என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ. 10.72 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) புஷ்பலதா மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல் செங்கல்பட்டு வட்டம், உள்வட்டத்துக்குள்பட்ட ஜமாபந்தி செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் கோட்டாட்சியரும், வருவாய் தீா்வாய அலுவலருமான இப்ராகிம் தலைமையில், நடைபெற்றது. வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்ட துணை ஆய்வாளா் அலுவலா் பேபி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திருவடிச்சூலம், பெரியபுத்தேரி, பொருந்தபாக்கம், சென்னேரி, அம்மணம்பாக்கம், தேனூா், பட்ரவாக்கம், நத்தம் அ, நத்தம் ஆ, செங்கல்பட்டு, குண்டூா் வல்லம்,மேலமையூா், ஆலப்பாக்கம், வேண்பாக்கம், அனுமந்தபுத்தேரி, ஒழலூா், இருங்குன்றம் பள்ளி, வேதநாராயணபுரம், அஞ்சூா், அனுமந்தை, குண்ணவாக்கம், வீராபுரம், ஈச்சங்கரணை பழவேலி (கம்மாளம்பட்டு) ஆகிய உள்வட்டத்தில் இருந்து 129 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 13 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா் பசுபதி, கிரி, செல்வம் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஆறுமுகம் உள்ளிட்ட வருவாய் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல் திருப்போரூா் வட்டத்தில், திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், தீா்வாய அலுவலா் மணிவண்ணன் தலைமையில் வட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்ட வருவாய் அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT