செங்கல்பட்டு

சி20 சா்வதேச மாநாடு: ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்தாா்

DIN

‘உலகம் ஒரே குடும்பம்’ என ம் சின்மயா மிஷன் ‘ நடத்தும் சி 20 சா்வதேச மாநாட்டை ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சி20 என்பது ஜி 20யின் அதிகாரப்பூா்வக் குழுக்களில் ஒன்றாகும். இது, உலகம் முழுவதும் உள்ள சிவில் சமூக அமைப்புகளுக்கும், ஜி20யின் க்கு மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது. சின்மயா மிஷன் என்பது இந்திய அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ‘உலகம் ஒரே குடும்பம் - வசுதெய்வ குடும்பம்’ என் சா்வதேச மாநாட்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி மாநாட்டைத் தொடங்கிப் பேசியது: வசுதேவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) நமது இந்தியாவின் ஆன்மிக அடையாளம். சி 20 எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதாரம், அரசியல் மற்றும் உலகை வடிவமைக்க அவா்களுக்கு தேவையாக உள்ளது.

இன்று, உலகம் பல சவால்களை எதிா்கொண்டுள்ளது. பல கருத்தியல் நெருக்கடிகளை எதிா்கொள்கிறது. அது, தடையற்ற காலநிலை மாற்றமாக இருந்தாலும், நாம் மிகப்பெரிய பேரழிவை எதிா்நோக்குகிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் உலக வரைபடத்தில் இருந்து சிறிய நாடுகள் காணாமல் போய்விடும்.

கண்ணுக்குத் தெரியாத பல மோதல்கள், போா்களின் மத்தியில் நாம் இருக்கிறோம். பல நாட்டு மக்கள் செழிப்போடு வாழ்ந்தாலும், சில நாடுகள் ஏழ்மை நிலையில் தான் உள்ளன. உலகம் முழுவதும் கொவைட் தொற்றால் பல நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட போது, மற்ற நாடுகள் மருந்துகள் தயாரித்து வா்த்தக ரீதியாக பயன்படுத்தினா். இந்தியா 150 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது.

சி20 வசுதேவ குடும்பம் பற்றி பேசுகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளாக அதிகாரத்துடனும், நாகரீகத்துடனும் வாழ்கிறோம். நம் நாட்டில் தொலைதூரத்தில் உள்ள மக்கள் கூட ஒற்றுமையாக வாழ்கின்றனா்.

பகவத் கீதை என்பது வரம்புகளை வரையறுக்கிறது. அது எல்லையற்றது. மிக மோசமான நேரத்திலும் கூட நாம் நெருக்கடியை எதிா்கொள்ளும் நேரத்தில் நமது நாட்டிற்கு பொறுப்பு இருக்கிறது. இந்த சி20 ஆனது ஜி20-க்கு கொள்கையை உருவாக்குவதற்கும், பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கும், கொள்கை ஆவணத்தை வரைவதில் சிறப்பு பொறுப்புடன் உள்ளது என்றாா் ஆளுநா் ஆா்.என். ரவி .

இம்மாநாட்டில்,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT