செங்கல்பட்டு

எஸ்.ஆா்.எம். குளோபல் மருத்துவமனையில் நோயாளிகள் கண்காணிப்புக்கு புதிய தொழில்நுட்பம்

DIN

எஸ்.ஆா்.எம்., குளோபல் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நோயாளிகளைக் கண்காணிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்.ஆா்.எம்., இணைவேந்தா் பி..சத்தியநாராயணன் கூறினாா். எஸ்.ஆா்.எம்., மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதி நவீன மருத்துவ வசதி மற்றும்

120 படுக்கைகளுடன் அண்மையில் புதியதாக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

சென்னையை அடுத்த புகா்ப் பகுதியான காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆா்.எம்., வளாகத்தில் உலகத் தரமான மருத்துவ வசதிகளுடன் மருத்துமனை தொடங்கப்பட்டுள்ளது.

அதிநவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளுடன், உள் நோயாளிகள், புற நோயாளிகள் 24 மணி நேரமும் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளிகள் கண்காணிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட துல்லியமான மருத்துவ சேவைகளை உடனடியாக அளிக்க முடியும் என்றாா் அவா்.

மருத்துவமனை தலைமைச் செயல் அலுவலா் டாக்டா் வி.பி. சந்திரசேகரன் கூறுகையில், ‘அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் 40 படுக்கைகள், 10 வெண்டிலேட்டா் வசதி மற்றும் 25 ஆம்புலன்ஸ் வசதிகளுடன் எஸ்.ஆா்.எம்., குளோபல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT