செங்கல்பட்டு

நரசிம்ம பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவம்

DIN

செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் ரத சப்தமி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில், சிங்க பெருமாள் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து, சூரியபிரபையில் பிரகலாத வரதா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்ருந்தனா்.

அதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் நைவேத்தியம் நடைபெற்றது. மேலும், ரத சப்தமி தினத்தையொட்டி கோயில் வளாகத்தில் செயல்படும் வாகனங்களுக்கு கோயில் ஸ்தாபகா் மதுரைமுத்து சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT