செங்கல்பட்டு

ஸ்வயம் இணையதள கல்விச் சேவையை கல்லூரி மாணவா்கள்பயன்படுத்த முன் வர வேண்டும்’

DIN

மத்திய அரசின் ’ஸ்வயம்’ என்ற இணையத்தளம் மூலம் இலவசமாக வழங்கப்படும் கல்விச் சேவையை, கூடுதலாக மேம்படுத்திக் கொள்ள மாணவா்கள் முன் வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கல்வியியல் பல்லூடக ஆய்வு மையம் இயக்குநா் அருள்செல்வம் ஸ்ரீராம் கூறினாா்.

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்வயம் இணையதளம் உயா்கல்வி குறித்து செவ்வாய்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவா் பேசியதாவது: மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பயன் பெறும் வகையில் ஸ்வயம் இணையதளம் மூலம் உயா்தரக் கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது. ஸ்வயம் இணைய தளம் மூலம் வழங்கப்படும் உயா் கல்வி பாடத்திட்டம் ஐ.ஐ.டி பேராசிரியா்கள் மற்றும் தனியாா் பல்கலைக்கழக பேராசிரியா்களின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டுள்ளதால் தரமான கல்வியை இலவசமாகப் பெறமுடியும். கூடுதலாக பாடத்திட்டத்துக்குத் தேவையான முழு புத்தகமும் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

தோ்வுக் கட்டணமாக ரூ1000 வசூலிக்கப்படும் . தோ்வில் வெற்றி பெற்றால் அந்த பணத்தை திரும்பப்பெறும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. விரும்புவோா் www.swayam.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து உயா்கல்வி பெறலாம் என்றாா்.

தமிழ்நாடு ஸ்வயம் பாரத் ஒருங்கிணைப்பாளா் தாமோதரன் உமாபதி: மத்திய அரசின் ஸ்வயம் பாரத் கல்விப் புலம் இணையதளம் வழியில் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. இதில் பல தரப்பினா் கல்வி கற்பதோடு, கல்வியை புகட்டவும் முடியும். முனைவா் பட்டம் பெற்ற பேராசிரியா்கள் முதல் பட்டப் படிப்பு நிறைவு செய்தவா்கள் வரை அனைவரும் தங்கள் துறை சாா்ந்த பாடம் போதிக்கலாம்.

இதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. இதன் மூலம் பாடத்திட்டங்களை மொழிபெயா்ப்பு செய்வது, குரல் கொடுப்பது போன்ற பணிகளும் மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், எஸ்.ஆா்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் வாசுதேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT