செங்கல்பட்டு

மதுராந்தகம் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை

DIN

மதுராந்தகம் நகருக்குள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

மதுராந்தகம் நகரில் சரக்கு வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள், இரு சக்கர வாகனங்கள், மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு போன்றவற்றால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. இதனால், அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சரக்கு வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மதுராந்தகம் நகருக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளா் வி.நாகராஜன் தெரிவித்தாா்.

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்த விவரம் அடங்கிய பதாகைகளை போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT