செங்கல்பட்டு

தசரா திருவிழா நிறைவு: கொட்டும் மழையிலும்அலங்கார வாகனங்களில் உற்சவா்கள் வீதியுலா

7th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டில் தசரா திருவிழா நிறைவையொட்டி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா கொட்டும் மழையிலும் நடைபெற்றது.

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, மேட்டுத்தெரு வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு தசரா ஊா்வலம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அனுமந்த புத்தேரி- அண்ணா சாலை சந்திப்பில் வன்னி மரம் குத்தி, சாமி ஊா்வலமாக புறப்பட்டதையடுத்து ஜீவானந்தம் அங்காளம்மன் கோயில், நத்தம் சுந்தர விநாயகா் கோயில், பெரிய நத்தம் ஓசூா் அம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில், சின்ன அம்மன் கோயில், மேட்டுத் தெரு திரௌபதி அம்மன் கோயில், அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், புது ஏரி செல்வ விநாயகா் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில் உள்ளிட்ட சுமாா் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மகிஷாசூரமா்த்தினி , சிவன் பாா்வதி, முப்பெரும் தேவியா்களான வராகி பிரித்தியங்கிராதேவி பராசக்தி, அங்காளம்மன் உள்ளிட்ட உற்சவா்கள் பவனி அணிவகுத்து சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT