செங்கல்பட்டு

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

1st Jul 2022 12:28 AM

ADVERTISEMENT

 மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கடைகளில் ஆய்வு செய்து நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாமல்லபுரத்தில் நெகிழிப் பொருள்களை ஒழிக்க பேரூராட்சி செயலா் கணேசன் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளா் உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டதில், 80 கிலோ நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளில் ரூ.12,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT