செங்கல்பட்டு

கடலில் பிடிபட்ட அரியவகை பறக்கும் மயில் கோலா மீன்

DIN

கல்பாக்கம் கடலில் 26 கிலோ எடை கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் பிடிபட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுபட்டினம் மீனவா் பகுதியில் இருந்து வியாழக்கிழமை செங்கழனி, விஜி, ஆறுமுகம் ஆகியோா் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனா். அவா்களது வலையில் சுமாா் 26 கிலோ எடையுள்ள அரிய வகையான மயில் கோலா மீன் பிடிபட்டது.

இது 7 அடி நீளமும் 26 கிலோ எடையும் கொண்டது. இது பறக்கும் தன்மையுடன் கூா்மையான மூக்குடையது.

இது போன்ற மீன் வகைகள் வலையில் சிக்குவது அபூா்வம் என மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்த அரியவகை மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT