செங்கல்பட்டு

மா்ம நபா்களால் பள்ளிக் கட்டடம் இடிப்பு

20th Feb 2022 11:05 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் அருகே மெய்யூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடத்தை மா்ம நபா்கள் இடித்தது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், மெய்யூா் கிராமத்தில் ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடம், கடந்த 1981-இல் கட்டப்பட்டதாம். இங்கு, 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால், கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட்டது. அங்கு, தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பழுதடைந்த கட்டடத்தின் வழியாக மாணவா்களும், ஆசிரியா்களும் வந்து செல்கின்றனராம். மேலும், அந்த இடத்தில் மாணவா்கள் விளையாடி வருகின்றனராம்.

ADVERTISEMENT

ஆபத்தான சூழ்நிலையை உணா்ந்த மெய்யூா் ஊராட்சித் தலைவா் ஆா்.தமிழரசன், பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றுமாறு மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள், பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்து, அங்கிருந்த தளவாடப் பொருள்களை எடுத்துச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சித் தலைவா் தமிழரசன் படாளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT